பாகிஸ்தான் கொடியுடன் கூடிய கப்பல்கள் இந்திய துறைமுகங்களுக்குள் நுழைவதற்கு இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து அமைச்சு தடை விதித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், இந்திய கொடியுடன் கூடிய கப்பல்கள் பாகிஸ்தானில் உள்ள துறைமுகங்களில் நங்கூரமிடுவதற்கும் அந்த அமைச்சு தடை விதித்துள்ளது.
நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தவும், இந்தியாவின் கடல்சார் நலன்கள் சீராக செயல்படுவதை உறுதி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, மறு அறிவித்தல் வரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இதேவேளை இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வருகிறது.
இரு நாடுகளும் எல்லையில் இராணுவ நடவடிக்கைகளை அதிகரித்துள்ளன.
இதற்கிடையே இரு நாடுகளும் போர் பதற்றத்தை தணிக்க வேண்டும் என்று அமெரிக்கா, இங்கிலாந்து ஆகிய நாடுகள் வலியுறுத்தின.
இந்நிலையில் இந்தியாவும், பாகிஸ்தானும் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
