உலகப் பொருளாதாரத்தில் ஆசியா ஒரு சக்தி வாய்ந்த நிலைக்கு மாறி வருவதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
கடுவெல மற்றும் தெஹிவளை, கல்கிஸ்ஸை மாநகர சபைகளை மையமாகக் கொண்டு இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.
இதன்போது, முறைகேடுகளினால் பயனடைந்தவர்கள் அரசாங்கம் மேற்கொண்டுவரும் மாற்றங்களுக்கு தடைகளை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு மேலோட்டமாகவன்றி நிரந்தரத் தீர்வுகளை வழங்க அரசாங்கத்திடம் திட்டம் உள்ளது எனவும் பிரதமர் குறிப்பிட்டார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் தீர்மானங்கள் ஐரோப்பாவையும் ஆசியாவையும் கொந்தளிப்பான நிலைக்கு தள்ளியதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
அத்துடன், உலகப் பொருளாதாரத்தில் ஆசியா ஒரு சக்தி வாய்ந்த நிலைக்கு மாறி வருவதாகவும், அப்படியானால் அந்தப் பொருளாதாரத்தில் எமது இடம் என்ன என்பதை நாம் தீர்மானிக்க வேண்டும் எனவும் பிரதமர் கூறினார்.
Link: https://namathulk.com/
