நாடளாவிய ரீதியில் 339 உள்ளூராட்சி மன்றங்களுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு தர்போது நடைபெறுகிறது.
காலை 7 மணிக்கு ஆரம்பமாகிய வாக்களிப்பு மாலை 4 மணியுடன் நிறைவடைய உள்ளது.
ஆகவே உரிய நேரத்திற்குள் வாக்காளர்கள் தங்களின் வாக்குச்சாவடிகளுக்கு சென்று வாக்குகளை பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
2018 ஆம் ஆண்டுக்குப் பின்னர் நடைபெறும் உள்ளூராட்சி தேர்தல் இதுவாகும்
தேசிய மக்கள் சக்தி,நாட்டின் ஆட்சியை பொறுப்பேற்ற பின்னர் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது தேசிய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது.
மாநகராட்சி, நகர சபைகள் மற்றும் பிரதேச சபைகள் அடங்கலாக 339 உள்ளூர் அதிகார சபைகளை உள்ளடக்கிய 4,877 தேர்தல் வட்டாரங்களுக்காக, 13,759 வாக்குச்சாவடிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
Link: https://namathulk.com/
