சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் பகிடிவதை காரணமாக மாணவர் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட மேலும் ஆறு மாணவர்கள், பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தால் மே மாதம் 16 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக, 10 மாணவர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 4 ஆம் திகதி நான்கு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
தற்போது, மேலும் ஆறு மாணவர்கள் கைது செய்யப்பட்டு, மே மாதம் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதனால், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை 10ஐ எட்டியுள்ளது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய 11 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com/
