தற்போது நடைப்பெற்று வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு, இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காதவர்கள் இருந்தாலும், வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்துவதற்கு எவ்வித தடையும் இல்லை என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
ஊடக சந்திப்பொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் அதனை கூறினார்.
எவ்வாறாயினும், வாக்காளர் அட்டை பெற முடியாதவர்களும் எவ்வித தடையுமின்றி வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கை செலுத்த முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், வாக்காளர் அட்டை இல்லை என்றால் எந்தப் பிரச்சினையும் இல்லை எனவும், இது கட்டாயமான ஆவணம் அல்ல எனவும் தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டார்.
தேசிய அடையாள அட்டை, செல்லுபடியாகும் கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப்பத்திரம் ஆகியவற்றை வாக்களிக்க பயன்படுத்த முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், ஓய்வு பெற்றவர் என்றால், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட ஓய்வூதிய அடையாள அட்டையை பயன்படுத்தலாம் என அவர் கூறினார்.
மேலும், சமூக சேவைகள் திணைக்களத்தால் பிரதேச செயலாளர்கள் மூலம் வழங்கப்படும் முதியோர் அடையாள அட்டையையும் பயன்படுத்த முடியும்.
இதற்கு மேலதிகமாக, மதத்தலைவர்கள் அவர்களுக்கான அடையாள அட்டையை பயன்படுத்தலாம்.
கடந்த காலத்தில் அடையாள அட்டைகள் மற்றும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளில் தாமதங்கள் ஏற்பட்டதால், புகைப்படத்துடன் கூடிய ஆவணம் வழங்கப்பட்டது.
அந்த ஆவணமும் ஏற்றுக்கொள்ளப்படும்.
இவை தவிர, தேர்தல்கள் ஆணைக்குழுவால் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட அடையாள அட்டையையும் பயன்படுத்தலாம்.
இவை எதுவும் இல்லாதவர்களுக்கு, தேர்தல் அலுவலகங்களில் இருந்து தேர்தலுக்காக தற்காலிக அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.
இந்த ஆவணங்களில் ஏதேனும் ஒன்று இருந்தால், நீங்கள் வாக்களிப்பு நிலையங்களில் உங்கள் வாக்கை செலுத்த முடியும் என தேர்தல் ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்
Link: https://namathulk.com/
