ஜனாதிபதிக்கும் , உலக வங்கியின் தலைவருக்கும் இடையில் சந்திப்பு
இரண்டு தசாப்தங்களின் பின்னர் நாட்டிற்கு, உலக வங்கியின் தலைவர் ஒருவர் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
நாட்டிற்கு வருகை தந்துள்ள உலக வங்கியின் தலைவர் அஜய் பங்காவை, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று சந்தித்துள்ளார்.
முதலீடு, டிஜிட்டல் மயமாக்கல், சுற்றுலா, விவசாயம் மற்றும் பிராந்திய மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் 3 ஆண்டு கூட்டாண்மை தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது .







Link: https://namathulk.com/
