‘ஒபரேசன் சிந்தூர்’ நடவடிக்கையினூடாக, பாகிஸ்தானில் பயங்கரவாத உள்கட்டமைப்பு மீது இந்தியா தாக்குதல்களை மேற்கொண்டுள்ளது.
ஒன்பது இடங்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதனூடாக நீதி நிலைநாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜம்மு-காஷ்மீர் (PoJK) முழுவதும் ஒன்பது பயங்கரவாதத் தளங்கள் மீது இலக்கு வைக்கப்பட்ட தாக்குதல்களை இந்திய ஆயுதப் படைகள் மேற்கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தியாவிற்கு எதிரான தாக்குதல்களை நடத்துவதற்கான மையங்களாக அடையாளம் காணப்பட்ட பாகிஸ்தானிலும், பாக்கிஸ்தான் காஷ்மீர் பகுதியிலும் உள்ள பயங்கரவாதத் தளங்களைத் தாக்கி, இந்திய ஆயுதப் படைகள் ‘ஆபரேஷன் சிந்தூர்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளதை இந்திய பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
link: https://namathulk.com/
