கொழும்பு – கொட்டாஞ்சேனை பதினாறு வயதுடைய பாடசாலை மாணவியின் தற்கொலைச் சம்பத்துடன் தொடர்புடைய சகல நபர்களும் தண்டிக்கப்படவேண்டும் என தெரிவித்து கொழும்பு இராமநாதன் இந்து மகளிர் கல்லூரி முன்பாக இன்று காலை மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப் போராட்டத்தில் பெற்றோர்கள், அரசியல்வாதிகள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கலந்துகொண்டனர்.
அத்தோடு இச் சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பதற்காக சம்பந்தப்பபட்ட அனைவருக்கும் தகவல்களை தெரிவிப்பதாக போராட்ட ஏற்பாட்டுக் குழுவினர் கருத்து தெரிவித்தனர்.
இதேவேளை மழையையும் பொருட்படுத்தாது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அத்தோடு பேராட்டம் இடம்பெற்ற பகுதிகளில் பொலிஸாரும் குவிக்கப்பட்டடிருந்தமை குறிப்பிடத்தக்கது
link: https://namathulk.com/
