இலங்கை விமானப்படையின் பெல் ((Bell) 212 ஹெலிகொப்டர் மதுரு ஓயா பகுதியில் இன்று விபத்துக்குள்ளகியுள்ளது.
பயிற்சி ஹெலிகொப்டர் ஒன்றே விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹிங்குராங்கொட விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்ட ஹெலிகொப்டர், கீழே வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
ஹெலிகொப்டரில் இருந்த இரண்டு விமானிகளும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாகவும், காயமின்றி தப்பியதாகவும் இலங்கை விமானப்படை உறுதி செய்துள்ளது.
விபத்துக்கான காரணத்தைக் கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
link: https://namathulk.com/
