புதிய பாப்பரசராக தேர்ந்தெடுக்கப்பட்ட அமெரிக்காவின் ரொபர்ட் பிரான்சிஸ் பிரீவோஸ்ட்டை (Robert Francis Prevost) வாழ்த்தி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது அதிகார பூர்வ X கணக்கில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், “உங்கள் பங்கு பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது, மேலும் விசுவாசிகளை அதன் மூலம் வழிநடத்த உங்களுக்கு வலிமை கிடைக்க வாழ்த்துகிறேன்.
உங்கள் தலைமை உலகெங்கிலும் உள்ள மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளிக்கட்டும்.இலங்கையிலிருந்து அன்பான வாழ்த்துக்கள்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், கத்தோலிக்க திருச்சபையின் 2,000 ஆண்டுகால வரலாற்றில் முதல் அமெரிக்க பாப்பரசராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது
link: https://namathulk.com/
