இந்தியன் ப்ரீமியர் லீக் 2025 கிரிக்கெட் தொடர் காலவரையறையின்றி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையிலான பதற்றமான சூழ்நிலை காரணமாக இவ்வாறு குறித்த போட்டித் தொடர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்;னதாக போர் பதற்றம் அதிகரித்துள்ளதால் ஐபிஎல் தொடரை நிறுத்தி வைப்பது குறித்து பிசிசிஐ ஆலோசனை கூட்டம் நடத்தியது.
இந்த கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் உட்பட பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் இந்தியாவில் நிலவும் பதற்றமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு எஞ்சிய ஐபிஎல் போட்டிகளை நிறுத்தி வைப்பது என முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
நிறுத்தி வைக்கப்படும் ஐபிஎல்லின் மீதமிருக்கும் போட்டிகல் எப்போது நடைபெறும்? என்பது குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என தகவல் வெளியாகி இருக்கிறது.
இதற்கிடையில், தற்போது நடைபெற்று வரும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை பாதியில் நிறுத்தி, மீதமுள்ள போட்டிகளை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது.
link: https://namathulk.com/
