இந்தியா இராணுவத் தாக்குதலை நிறுத்தினால் பாகிஸ்தானும் நிறுத்துவது குறித்து பரிசீலிக்கும் என பாக். வெளியுறவு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தான் மீது 8 இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதற்கமைய ரஃபிக், முரித், சக்காலா, ரஹிம் யார் கான், சுக்சூர், சுனியன் மற்றும் பஸ்ரூர், சியால்கோட் ஆகிய இராணுவ தளங்களை இலக்கு வைத்து இந்தியா தாக்குதல் நடத்தியுள்ளது.
இதேவேளை பாகிஸ்தானின் பஞ்சாப்பில் உள்ள சர்கோதா விமானப்படை தளத்தின்
மீது இந்திய இராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்நிலையில் இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோயிடம் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கூறியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியா தாக்குதலை தொடர்ந்தால் நாங்களும் தொடர்வோம்.
இந்தியா தாக்குதலை நிறுத்தினால் நாங்களும் தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக பரிசீலிப்போம்.
பொறுமையை இழந்ததால்தான் தாக்குதலை தொடங்கினோம் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் இஷாக் தர் கூறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
link: https://namathulk.com/
