கொழும்பு கொட்டாஞ்சேனை பகுதியில் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி பம்பலப்பிட்டிய பிரதேசத்தில் பாடசாலை கல்வி கற்கும் காலத்தில் அந்த பாடசாலையின் ஆசிரியர் ஒருவரால் துன்புறுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய ஆசிரியர் கடந்த ஜனவரி மாதம் 8 ஆம் திகதி கைது செய்யப்பட்டு 10 ஆம் திகதி, பிணையில் விடுவிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள ஆசிரியருக்கு வெளிநாட்டு பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது.
கொட்டாஞ்சேனையில் கல்பொத்த வீதியிலுள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த தில்ஷி அம்ஷிகா என்ற 15 வயது மாணவி கடந்த ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி 6 ஆவது மாடியிலிருந்து விழுந்து தனது உயிரை மாய்த்துக் கொண்டார்.
குறித்த மாணவியின் பெற்றோர் கடந்த 4 ஆம் திகதி ஊடக சந்திப்பொன்றின் போது பாடசாலை ஆசிரியரின் செயற்பாடுகளும், தனியார் கற்கை நிலைய ஆசிரியரின் செயற்பாடுகளும் மாணவியின் மரணத்திற்குக் காரணம் எனக் குற்றம் சுமத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Link: https://namathulk.com/
