பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்ட மோதல் முடிவுக்கு வந்துள்ளது.
இதற்கமைய அனைத்து விதமான தாக்குதல்களையும் நிறுத்தியதாக இந்தியா – பாகிஸ்தான் ஒப்புதல் அளித்துள்ளன.
நிலம், வான், கடல் என அனைத்து விதமான தாக்குதல்களையும் இந்தியா நிறுத்தியதாக இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் விக்ரம் மிஸ்ரி அறிவித்துள்ளார்.
இதேவேளை இந்தியாவும் பாகிஸ்தானும் முழுமையான மற்றும் உடனடி போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக பாகிஸ்தான் துணைப் பிரதமர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மத்தியஸ்தத்தால் நடத்தப்பட்ட நீண்ட பேச்சுவார்த்தைகளின் விளைவாக போர்நிறுத்தம் ஏற்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளதுடன் இரு நாடுகளுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
Link: https://namathulk.com/
