இந்திய குடியரசுக்கும் பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசுக்கும் இடையில் எட்டப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திற்கு தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அமைதியை நோக்கிய இந்த குறிப்பிடத்தக்க நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் மற்றும் மக்கள் சார்பாக பாராட்டுவதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.
போர்களை உடனடியாக நிறுத்துவது இரு தரப்பிலும் உள்ள அப்பாவி உயிர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு முக்கிய நடவடிக்கை மட்டுமல்ல, நமது பிராந்தியத்தில் நீடித்த அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை அடைவதற்கான ஒரு முக்கியமான படி எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த முக்கியமான கட்டத்தில் ராஜதந்திரம் மற்றும் நிதானத்தைத் தேர்ந்தெடுப்பதில் உண்மையான அரசியல் திறமையை வெளிப்படுத்தியதற்காக இரு நாடுகளின் தலைமைகளை யும் பாராட்டுவதாகவும் pனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளின் நெருங்கிய அண்டை நாடாகவும் நீண்டகால நண்பராகவும், இந்த போர் நிறுத்தம் தொடர்ச்சியான ஈடுபாட்டின் மூலம் நீண்டகால பிரச்சினைகளுக்கு அமைதியான மற்றும் ஆக்கபூர்வமான தீர்வுக்கு ஒரு அடித்தளமாக செயல்படும் என நம்புவதாகவும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.
Link: https://namathulk.com/
