தன் உயிரை மாய்த்த மாணவி டில்லி ஹம்சிகாவிற்காக நீதி வேண்டி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பாடசாலைகளில் உளவியல் கட்டமைப்பை வலிமைப்படுத்தவும், நீதி கோரி இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமாகி காந்தி பூங்காவளாகத்தின் முன் நடைபெற்றது.
என் மௌனம் என் குற்றமல்ல உன் செயல்தான் குற்றம் மௌனத்தை காப்போம் என தன்னுயிரை மாய்த்த டில்லி ஹம்சிகாவுக்காக வேண்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு, குறித்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது
பெண்கள் அமைப்புகள் குறித்த ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்தது.
இதில் பெண்ணியம் சார்ந்த சமூக செயற்பாட்டாளர்கள்இ சமூக அமைப்புக்கள்இ பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.





Link: https://namathulk.com/
