முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா இலங்கை அணிகள் மோதுகின்றன.
இந்தியா, இலங்கை, தென் ஆப்பிரிக்கா ஆகிய 3 நாட்டு மகளிர் அணிகள் இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.
இதில் லீக் சுற்று முடிவில் இந்தியா 3 வெற்றி, ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகள் பெற்று முதலிடமும், இலங்கை 2 வெற்றி, 2 தோல்வியுடன் 4 புள்ளிகளை பெற்று 2-வது இடமும் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
தென் ஆப்பிரிக்கா ஒரு வெற்றி, 3 தோல்வியுடன் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டு வெளியேறியது.
இந்த நிலையில் இன்று நடைபெறும் முத்தரப்பு மகளிர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மோதுகின்றன.
இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி முதலில் துடுப்பாட்டம் செய்வதாக அறிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
