இலங்கையில் நேற்று பதிவான விபத்துக்கள் – 24 பேர் பாதிப்பு.

Aarani Editor
1 Min Read
SriLanka Accidents

யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 20 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து கண்டி அலதெனிய, யடிஹலகல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

விபத்தில் காயமடைந்தவர்கள் பரிகம, கண்டி மற்றும் பேராதனை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அத்துடன், காலி, அஹங்கமா, கபலானாவில் உள்ள லெவல் கிராசிங்கில் BMW SUV ஒன்று ரயிலில் மோதியதில் நான்கு பேர் காயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் காலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

காயமடைந்த அனைவரும் கொழும்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதோடு, இந்த சம்பவம் குறித்து அஹங்கம பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *