மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் இலங்கை கடற்படை நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
இதன்படி, 218 கிலோ கேரள கஞ்சா பொதிகளுடன் ஆளில்லாத நிலையில் கண்ணாடி இழை படகு ஒன்றும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
கடற்படையின் நடவடிக்கைகளால் படகை கரைக்கு கொண்டு வர முடியாததால், கடத்தல்காரர்கள் பேசாலை கடற்கரையில் படகுடன் கேரள கஞ்சாவினை கை விட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், கேரள கஞ்சா பொதிகள் மற்றும் படகு ஆகியன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக பேசாலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்படுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
Link: https://namathulk.com/
