ஐபிஎல் போட்டிகள் வரும் மே 17 ஆம் தேதி மீண்டும் தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி இறுதிப் போட்டியுடன் முடிவடையும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22 ஆம் திகதி நடந்த பயங்கரவாத தாக்குதலை தொடர்ந்து இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையே கடுமையான இராணுவ மோதல் நிலவி வந்தது.
இதனால் இரு நாடுகளும் இடையே போர் பதற்றச் சூழல் ஏற்பட்டது.
கடந்த மே 7 ஆம் திகதி அதிகாலை எல்லையில் நடந்த ட்ரோன், ஏவுகணை தாக்குதல் காரணமாக தர்மசாலாவில் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டி பாதியிலேயே கைவிடப்பட்டது.
இந்நிலையில் நிறுத்தப்பட்ட கிரிக்கெட் போட்டிகள் வரும் மே 17 அன்று தொடங்கி ஜூன் 3 ஆம் தேதி இறுதி போட்டியுடன் முடிவடையும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”அரசு மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் அனைத்து முக்கிய பங்குதாரர்களுடனும் விரிவான ஆலோசனைகளுக்கு பிறகு, மீதமுள்ள சீசனை தொடர கிரிக்கெட் சபை முடிவு செய்துள்ளது.
மொத்தம் 17 போட்டிகள் 6 மைதானங்களில் நடைபெறும்.
மே 17 ஆம் திகதி தொடங்கி ஜூன் 3 ஆம் திகதி இறுதிப் போட்டியுடன் முடிவடையும்.
திருத்தப்பட்ட அட்டவணையில் இரண்டு இரட்டை-தலைப்புகள் அடங்கும். அவை இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும்.
பிளேஆஃப்கள் பின்வருமாறு திட்டமிடப்பட்டுள்ளன:
தகுதிச் சுற்று 1 – மே 29
எலிமினேட்டர் – மே 30
தகுதிச் சுற்று 2 – ஜூன் 1
இறுதிப் போட்டி – ஜூன் 3
பிளேஆஃப் போட்டிகளுக்கான மைதான விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.’ என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Link: https://namathulk.com/
