முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிவுடன் செயற்பட்டதாகவும் அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கிடையாது என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
கொழும்பில் மத வழிபாட்டில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து வெளயிட்ட அவர்,
பெரும்பான்மை பலம் உள்ளது என்ற ஆணவத்தில் அரசாங்கம் தான்தோன்றித்தனமாக செயற்படுகிறது.
2020ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த கோட்டபய ராஜபக்ஷ அரசாங்கத்துக்கும் பெரும்பான்மை பலம் இருந்ததையும், அந்த பலம் இரண்டாண்டுக்குள் பலவீனமடைந்ததையும் அரசாங்கம் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தத்தை பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிப்பதாயின் அதற்கு இந்தியாவின் அனுமதியை பெற வேண்டும் என்று ஜனாதிபதி குறிப்பிடுவது வேடிக்கையாகவுள்ளது.
இந்தியாவுடன் கைச்சாத்திடப்பட்டுள்ள பாதுகாப்பு தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இந்த அரசாங்கம் பகிரங்கப்படுத்தும் என்ற நம்பிக்கை கிடையாது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியா தொடர்பான ஒருசில விடயங்களில் தற்றுணிபுடன் செயற்பட்டார்.
அந்த தற்றுணிபு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு இல்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
