இலங்கையின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடம்பெற்ற வெ வ்வேறு வீதி விபத்துகளில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாத்தறையில், பிரவுன்ஸ் ஹில் பகுதிக்கு அருகில் மாத்தறை-தங்கல்லே கடற்கரை வீதியில் நேற்று இரவு ஒரு பயங்கர விபத்தொன்று ஏற்பட்டது.
ஒரு பஸ்சை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் சறுக்கி, பஸ்சில் மோதியதில், அதில் பயணித்தவரும், பின்னால் பயணித்தவரும் உயிரிழந்தனர்.
உயிரிழந்தவர்கள் மாத்தறையைச் சேர்ந்த 30 வயது ஆண் மற்றும் வீரவிலயைச் சேர்ந்த 23 வயது பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் பஸ் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதனிடையே, குச்சவெளியில் அதிகாலையில், திருகோணமலை-புல்மோட்டை வீதியில் 19வது மைல்கல் அருகே பாதசாரி ஒருவர் டாக்ஸியில் மோதி உயிரிழந்தார்.
நிலாவெளியைச் சேர்ந்த 52 வயதுடைய இவர், நிலாவெளி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக டாக்ஸி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், ஸ்ரீ பன்னானந்த சந்தியிலிருந்து போதியா சந்தி நோக்கிச் சென்ற லோறி விபத்துக்குள்ளானதில், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 52 வயது சைக்கிள் சாரதியொருவர் உயிரிழந்தார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவர் உயிரிழந்துள்ள நிலையில், பொலிசார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
Link: https://namathulk.com/
