ஜனாதிபதி அலுவலக அதிசொகுசு வாகன ஏலத்தின் இரண்டாவது கட்டமாக, சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து நீக்கப்பட்ட 26 வாகனங்கள் இன்றையதினம் ஏலமிடப்படுகின்றன.
விற்பனை செய்யப்படவிருக்கும் அனைத்து வாகனங்களும் கடந்த பத்து வருடங்களுக்குள் உற்பத்தி செய்யப்பட்டவை என்பதுடன், அதற்கமைவான விலைமனுக் கோரல் நேற்றையதினத்துடன் நிறைவடைந்தது.
அரசாங்கத்தின் செலவுக் குறைப்பு மற்றும் நிதிப் பொறுப்புக்கூறலை பலப்படுத்தும் நோக்கில் இந்த வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்வதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி, முதற்கட்டமாக நடத்தப்பட்ட வாகன ஏலத்தில் 15 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டதாக, ஜனாதிபதி ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
Link: https://namathulk.com/
