யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலையொன்றில் தரம் 8 இல் கல்வி கற்கும் மாணவர்கள் மீது அதே பாடசாலையைச் சேர்ந்த ஆசிரியர் ஒருவர் கதிரைகளால் தாக்கிய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இந்த சம்பவத்தில் சில மாணவர்கள் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த பாடசாலையில் கல்வி கற்பிக்கும் குறித்த ஆசிரியர்இ வகுப்பு ஒன்றிற்கு சென்று சத்தம் எழுப்பிய மாணவர்கள் யார் என கேள்வி எழுப்பியதாக கூறப்படுகின்றது.
எனினும் ஆசிரியரின் கேள்விக்கு மாணவர்கள் பதில் வழங்காத நிலையில் மாணவர்கள் மீது கதிரையால் ஆசிரியர் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் காயமடைந்த மாணவர்கள் யாழ் போதனா வைத்திய சலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது.
Link: https://namathulk.com/
