இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளில், இங்கிலாந்து வீரர்களான ஜோஃப்ரா ஆர்ச்சர் (Jofra Archer) ஜெமி ஓவர்டன் (Jamie Overton ) மற்றும் சாம் கரன் (Sam Karan) ஆகியோர் பங்கேற்க மாட்டார்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் சபையின் உயர் அதிகாரி ஒருவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும் ஜோஸ் பட்லர், வில் ஜேக்ஸ் (Will Jakes) லியாம் லிவிங்ஸ்டன்(Liam Livingston) மற்றும் ஜேக்கப் பட்லா (Jacob Batla) ஆகியோர் எஞ்சிய ஐ.பி.எல். போட்டிகளில் பங்கேற்பார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மொயீன் அலி, மீண்டும் போட்டிகளில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானம் மேற்கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
இடைநிறுத்தப்பட்ட இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் ஒருவாரத்தின் பின்னர், நாளை மறுதினம் பெங்களூரூவில் மீண்டும் ஆரம்பமாகவுள்ளன.
இதன் இறுதிப் போட்டி எதிர்வரும் ஜூன் மாதம் 3 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
