உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பது குறித்து முக்கிய பேச்சுவார்த்தை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நேற்றையதினம் மாலை நடைபெற்றது.
நேற்று முன்தினமும் இவ்வாறான பேச்சுவார்த்தை ஒன்று நடைபெற்றிருந்தது.
அதன்போது ஐக்கிய மக்கள் சக்தி, சிறிலங்கா பொதுஜன பெரமுன போன்ற முக்கிய கட்சிகளின் உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
எனினும் நேற்றைய பேச்சுவார்த்தையில் அந்த கட்சிகள் கலந்து கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
எதிர்க்கட்சிகள் இணைந்து ஆட்சியமைக்கக்கூடிய ஆசனங்களைப் பெற்றுள்ள உள்ளூராட்சி மன்றங்கள் தொடர்பாக நேற்றைய பேச்சுவார்த்தையில் கலந்துரையாடப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Link: https://namathulk.com/
