ஆசியாவின் சில பகுதிகளில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஹொங்கொங், சிங்கப்பூர், சீனா மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா தொற்று எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
ஹொங்கொங்கின் முக்கிய பகுதிகளில் பலரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனை மாதிரிகளில் பெரும்பாலானவற்றில் தொற்றுகள் உறுதியாக இருப்பது தெரியவந்துள்ளது.
அதேவேளை, சிங்கப்பூரில் ஒரே வாரத்தில் 28 சதவீதம் கொரோனா தொற்றுகள் பதிவாகியுள்ளது.
இதேபோல தாய்லாந்திலும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புக்கள் தொடர்பில் இதுவரை உறுதியான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.
Link: https://namathulk.com/
