உக்ரைனின் வடகிழக்கு பிராந்தியமான சுமியில் ரஷ்ய ஆளில்லா விமானம் ஒன்று பஸ்சில் மோதி ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதோடு, 04 பேர் காயமடைந்துள்ளனர்.
மொஸ்கோவும் கியேவும் பல ஆண்டுகளுக்குப் பிறகு முதல் நேரடி அமைதிப் பேச்சுவார்த்தை நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இது மற்றொரு ஷெல் தாக்குதல் மட்டுமல்ல – இது ஒரு இழிவான போர்க்குற்றம் என உக்ரைனின் தேசிய பொலிஸ் தெரிவித்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் அறிக்கையை மேற்கோள் காட்டி, சுமி பகுதியில் உள்ள உக்ரேனிய இராணுவ உபகரணங்கள் நிறுத்தும் பகுதியை ரஷ்யப் படைகள் ட்ரோன்களால் தாக்கியதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்று துருக்கியில் நடந்த ரஷ்ய மற்றும் உக்ரேனிய அதிகாரிகளின் சந்திப்பு தற்காலிக போர் நிறுத்தத்திற்கு மத்தியஸ்தம் செய்யத் தவறிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
Link: https://namathulk.com/
