இலங்கையில் இடம்பெற்ற தமிழின படுகொலைக்கு சர்வதேச நாடுகளின் ஆதரவு பெருகி வருவதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வேட்பாளர் நிசாந்தன் தெரிவித்துள்ளார்.
யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர் கனடாவில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி திறக்கப்பட்டமை இலங்கையில் இடம் பெற்ற தமிழின படுகொலையை சர்வதேசம் அங்கீகரித்துள்ளமை வரலாற்று திருப்புமுனையாக காணப்படுகிறது.
இவ்வாறு உலக நாடுகள் எமது தமிழினப் படுகொலையை தமது நாடுகளில் அங்கீகரித்து எமது நீதிக்கான பயணத்தை வெற்றியடைய செய்ய வேண்டும் என்பது தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு.
தற்போதைய இனவாத அரசாங்கமான ஜேவிபி அரசாங்கம் தமிழின படுகொலையை சர்வதேச நாடுகள் அங்கீகரித்துள்ளமைமைக்கு கண்டனம் தெரிவித்து வருவது தமது ஆட்சி அதிகாரங்களை தக்க வைத்துக் கொள்ளும் ஒரு செயற்பாடாகும்.
ஆகவே முள்ளிவாய்க்கால் சம்பவம் 16 ஆண்டுகளைக் கடக்கின்ற நிலையில் தமிழர் தாயகம் எங்கும் உணர்வு பூர்வமாக இந்த நாளை அனுஷ்டிக்க அணிதிரள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
Link: https://namathulk.com/
