மூவருக்கு மரண தண்டனை விதித்து மேல் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு.

Aarani Editor
1 Min Read
Court Order

2018 டிசம்பரில் பேருவளை கடற்கரையில் மீட்கப்பட்ட பெருமளவிலான போதைப்பொருள் தொகை தொடர்பாக கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களுக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகம் வழங்கிய ரகசிய தகவலின் அடிப்படையில், டிசம்பர் 05, 2018 அன்று நடத்திய சோதனையைத் தொடர்ந்து, வெளிநாட்டு இழுவைப் படகில் 231.52 கிலோ ஹெராயினுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகளின் மூலம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட மேலும் ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, ​​கொழும்பு உயர் நீதிமன்றம் சந்தேக நபர்களில் மூவருக்கு மரண தண்டனை விதித்தது.

Link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *