வவுனியாவில் இன்று காலை வீசிய மினி சூறாவளியால் சில பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன.
மரங்கள் முறிந்து விழுந்ததுடன் மக்கள் குடியிருப்புக்கள், வியாபார நிலையங்கள், வாகனங்கள் என சேதமடைந்துள்ளதோடு மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை வவுனியாவின் குருமன்காடு பூந்தோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் கடும் காற்றுடன் மழையும் பெய்துள்ளது
மேலும் பூந்தோட்டம் சந்தியில் மின்சார வயரின் மீது தென்னை மரம் முறிந்து வீழ்ந்து ஆபத்தான நிலையில் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
Link: https://namathulk.com/
