தமிழர் தாயகமான வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளுராட்சி சபைகளின் அதிகாரத்தை ஆளும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றுவதற்கு இடமளிக்காமல், தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து ஆட்சியமைக்கத் தீர்மானித்துள்ளன.
உள்ளுராட்சி சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்கில் 35 சபைகளில் முதல் நிலை பெற்றுள்ளது.
எனவே, மேற்படி சபைகளில் ஆட்சி அமைப்பதற்குத் தார்மீக அடிப்படையில் ஏனைய தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என்று தமிழரசுக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள உள்ளுராட்சி சபைகளில் இணைந்து ஆட்சி அமைப்பது குறித்து ஆராயும் சந்திப்பு ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி மற்றும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சிகளுக்கு இடையில் யாழ். கந்தரோடைரையில் அமைந்துள்ள சித்தார்த்தனின் இல்லத்தில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பில் வடக்கு, கிழக்கில் உள்ள உள்ளூராட்சி சபைகளில் தமிழ்க் கட்சிகளே ஆட்சி அமைக்க வேண்டும் எனவும், அந்தச் சபைகள் குறிப்பாக தேசிய மக்கள் சக்தியின் வசம் செல்வதற்கு அனுமதிக்கக்கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளன.
Link: https://namathulk.com/
