மேல் மாகாண பிரதேச செயலகங்களில் ஜனாதிபதி நிதியத்தின் செயற்பாடுகளுக்கு பொறுப்பாக செயல்படும் அதிகாரிகளுக்கான விசேட பயிற்சி செயலமர்வு ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்றது.
ஜனாதிபதி நிதியத்தின் செயல்பாடுகளை பிரதேச மட்டத்திற்கு விரிவுபடுத்துவதற்கு அமைவாக, மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து பிரதேச செயலகங்களிலும் மேற்படி விடயத்துக்கு பொறுப்பான அதிகாரிகளுக்கு ஜனாதிபதி நிதிய செயல்பாடுகள் குறித்த நடைமுறை அறிவை மேலும் வழங்குவதற்காக இந்த விசேட செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வில், அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் இடையில் சிறந்த தொடர்பாடல்களை எவ்வாறு கட்டியெழுப்புவது மற்றும் அதனை பேணுவது என்பது குறித்து ஜனாதிபதி ஊடக ஆலோசகர் சந்தன சூரியபண்டார விளக்கமளித்தார்.
மிகவும் தேவையுள்ளவர்களுக்கு சேவைகளை வழங்குவதே ஜனாதிபதி நிதியத்தின் முக்கிய நோக்கம் மற்றும் எண்ணக்கருவாகும்.
தற்போது பிரதேச செயலக மட்டத்தில் நிதியத்தின் சேவைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளதால், அதிகமான மக்கள் சேவைகளை எளிதாகப் பெற முடிந்துள்ளதாகவும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமநாயக்க, சுட்டிக்காட்டினார்.
இந்த சேவையின் மதிப்பை அனைத்து அரசாங்க அதிகாரிகளும் புரிந்துகொண்டுள்ளனர் என நம்புவதாகவும், மக்களுக்காக அரசாங்கம் மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக்க அனைவரினதும் ஆதரவு தேவை எனவும் ஜனாதிபதியின் செயலாளர் கூறினார்.








Link: https://namathulk.com/
