நுவரெலியாவில் சிதறி கிடக்கும் வெசாக் கூடுகளும் அதன் கழிவுகளும் – சுகாதார சீர்கேடால் பாதிப்பு.

Aarani Editor
1 Min Read
Waste Management

சுற்றுலாவிற்கு வரலாற்று சிறப்புமிக்க நுவரெலியா நகரம் தற்போது அதிகரித்து வரும் கழிவுப் பிரச்சினையை எதிர்கொண்டு வருகிறது.

நுவரெலியா – பதுளை பிரதான வீதியில் மத்திய சந்தைக்கு எதிரில் அதிகமாக வெசாக் கூடுகளும் அதன் கழிவுகளும் சிதறி கிடப்பதாக பொது மக்கள் தெரிவித்தனர்.

நுவரெலியாவில் கடந்த 10ஆம் திகதி முதல் 16 திகதி வரை தேசிய வொசாக் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டது.

இந்த நிலையில் ஏராளமான வெசாக் மின் தோரணங்கள் நிர்மாணிக்கப்பட்டது. அத்துடன், பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் வெசாக் கூடுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டது.

எவ்வாயினும் 17 ஆம் திகதி முதல் ஒதுக்கப்பட்ட ஒவ்வொரு குழுவினரும் அவர்கள் அமைத்து காட்சிப்படுத்திய வெசாக் கூடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அகற்றிய வெசாக் கூடுகளையும் அதற்கு பயன்படுத்திய கழிவு பொருட்களையும் அதே இடங்களில் வீசி சென்றுள்ளதாகவும், இதனால் வீதியோரத்தில் நடந்து செல்ல முடியாமல் உள்ளதாகவும் குறித்து வீதியினை பயன்படுத்துவோர் குற்றம் சுமத்துகின்றனர்.

எனவே நுவரெலியா மாநகரசபை அதிகாரிகள் ஆய்வு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதில் குறிப்பாக வெசாக் கொண்டாடம் ஆரம்பித்த நாள் முதல் நுவரெலியாவிற்கு வருகைந்தந்த பக்தர்கள் பொலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் போத்தல்கள் உட்பட ஏராளமான கழிவுகளை நகரில் விட்டுச் சென்றதால் துப்புரவுப் பணியாளர்கள் தொடர்ந்து பணியாற்றுவது கடினமாக உள்ளதாக கூறப்படுகிறது

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *