யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் சட்டவிரோத சுருக்குவலை தொழில் மீண்டும் தலைதூக்கியுள்ளது.
நாளாந்தம் 50 மேற்பட்ட படகுகளில் செல்லும் மீனவர்கள் சட்டவிரோதமாக கடலில் ஒளிவைத்து சிறிய மீன்களுடன் 50,000முப அதிகமான மீன்களை கரைக்கு கொண்டுவருவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பாக அருகில் உள்ள வெற்றிலைக்கேணி கடற்படையினருக்கு தெரியப்படுத்துகின்ற போதும் அவர்கள் தான்தோன்றித்தனமாக செயற்படுவதாகவும் மறுநாள் சட்டவிரோத தொழிலாளர்களிடம் வந்து மீன்களை தமது தேவைக்கு பெற்றுச் செல்வதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்
சட்டவிரோத தொழிலாளர்களுடன் கடற்படை நெருக்கமான உறவுகளை பேணிவருவதால் அவர்களை கைது செய்யாமல் சட்டவிரோத தொழிலை ஊக்குவிப்பதாக தமக்கு சந்தேகம் எழுவதாக மீனவர்கள் குற்றம் சுமத்துவதுடன் கடற்தொழில் அமைச்சர் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டுமென தெரிவித்துள்ளனர்
சட்டவிரோத தொழிலாளர்கள் இன்றும் ஒளிவைத்து மீன்பிடிக்கும் வீடியோ காட்சியை வெளியிட்டுள்ளதுடன் அதில் பல்லாயிரக்கணக்கான குஞ்சு மீன்கள் இருப்பது காணொளி மூலம் தெரியவந்துள்ளது.
link: https://namathulk.com/
