பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் தமிழ் தேசிய பேரவையினர் அமெரிக்கா, சுவிஸ் நாடுகளின் தூதுவர்களுடன் இன்று கலந்துரையாடல்களில் ஈடுபட்டனர்.
இன்று பிற்பகல் இந்த சந்திப்பு கொழும்பில் இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ் தேசிய மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், தமிழ் தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ ஐங்கரநேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதன்போது தமிழ் மக்களுக்கு சமஸ்டியிலான நிரந்தர தீர்வு மற்றும் வடக்கில் தமிழ் மக்களின் காணி அபகரிப்பை நிறுத்த வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
link: https://namathulk.com/
