ஐ.பி.எல் : சென்னை – ராஜஸ்தான் அணிகள் மோதல்.

Aarani Editor
1 Min Read
IPL2025

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் லீக் சுற்று இறுதிகட்டத்தை நெருங்கி விட்ட நிலையில், டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்றிரவு நடக்கும் 62-வது லீக்கில் முன்னாள் சாம்பியன்களான சென்னை சூப்பர் கிங்சும், ராஜஸ்தான் ராயல்சும் மோதுகின்றன.

12 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, 9 தோல்வி என 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருக்கும் சென்னை அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் கடைசி இடத்தை தவிர்க்க வாய்ப்பு உள்ளது.

இதுவரை 13 ஆட்டங்களில் ஆடி 3 வெற்றி, 10 தோல்வி என 6 புள்ளியுடன் 9-வது இடம் வகிக்கும் ராஜஸ்தான் அணிக்கு இதுவே இந்த ஆண்டின் கடைசி போட்டியாகும்.

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவ்விரு அணிகள் மொத்தம் 30 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன, இதில் 16-ல் சென்னையும், 14-ல் ராஜஸ்தானும் வெற்றி பெற்றுள்ளன.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *