தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும் சம்பவங்களைத் தடுப்பதற்கு இதுவரையில் அரசாங்கம் போதியளவு நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று வாய்மொழிமூல விடைக்கான கேள்வி நேரத்தின்போது அவர் இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்இ
நாட்டில் சட்ட ஒழுங்கை நிலைநாட்டுவது அரசாங்கத்தின் அடிப்படை பொறுப்பு என்ற போதிலும்இ நாடு முழுவதும் இடம்பெறும் துப்பாக்கிச் சூடுஇ கொலைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கு அரசாங்கம் தவறியுள்ளது.
பல தடவைகளில் தாம் உட்பட சக பாராளுமன்ற உறுப்பினர்கள் இது குறித்து கேள்வி எழுப்பியுள்ள போதிலும் உரியத் தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை.
கடந்த 8 மாதங்களில் 79 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களில் 52 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் அதிகரிக்கும் வன்முறைக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் தொடர்பு இருப்பதை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லையா?
மக்களின் பாதுகாப்பிலேயே நாட்டின் பாதுகாப்பும் தங்கியுள்ளது.
போதைப்பொருள் பிரச்சினைகளை முன்னிறுத்தி சில குழுக்களுக்கு இடையிலான மோதலில் அவர்களது குடும்பத்தினரும்இ சாதாரண மக்களும் பாதிக்கப்படுகின்றனர்.
அத்துடன்இ கடுமையான உயிர் அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற உறுப்பினர் சிலருக்கு தங்களது அரசியலை முன்னெடுக்க முடியாமல் போயுள்ளதுடன்இ அச்சுறுத்தல்களால் அதிகாரிகளும் பதவி விலகுகின்றனர் என சுட்டிக்காட்டினார்.
Link: https://namathulk.com/
