கொழும்பு, கொட்டாஞ்சேனையில் மாணவியின் உயிரிழப்புக்கு பின்னர் பாரிய பேசுப்பொருளான கொழும்பிலுள்ள பிரபல பெண்கள் பாடசாலையின் அதிபருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
குறித்த பாடசாலையில் ஏற்கனவே கல்வி கற்ற 15வயது மாணவியொருவர் உயிரிழந்தமை தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில் அதிபருக்கான இடமாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த பாடசாலைக்கான புதிய அதிபர் கடந்த வெள்ளிக்கிழமை முதல் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் மாணவிக்கு ஏற்பட்டதாக தெரிவிக்கப்படும் சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் எதிர்வரும் ஜூன் 23ஆம் திகதி வரை வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் பொலிசாரும், கல்வி அமைச்சும், சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை உள்ளிட்ட பலத்துறைகளின் கீழ் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபராக கூறப்படும் ஆசிரியருக்கு கட்டாய விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
link: https://namathulk.com/
