ரஷ்யாவும் உக்ரைனும் போர் நிறுத்தம் மற்றும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான பேச்சுவார்த்தைகளை உடனடியாக ஆரம்பிக்குமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் இடம்பெற்ற இரண்டு மணி நேர தொலைபேசி உரையாடலுக்குப் பின்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினருக்கும் இடையில் அமைதிக்கான பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில், எதிர்காலத்தில் ஒரு சாத்தியமான சமாதான ஒப்பந்தம் குறித்து உக்ரைனுடன் இணைந்து பணியாற்றுவதற்கு தயாராக இருப்பதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
link: https://namathulk.com/
