முள்ளிவாய்க்கால் பேரவலம் – சர்வதேசம் அங்கீகாரம் கோரும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள்.

Aarani Editor
1 Min Read
USCongress

அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் பலரும், முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தை தமது சமூக ஊடகங்களில் நினைவுச்கூர்ந்துள்ளனர்.

இதன்போது அவர்கள் நீதி, பொறுப்புக்கூறலுக்கான அழைப்புக்களை விடுத்துள்ளனர்.

சர்வதேச சமூகத்தின் ஈடுபாடு மற்றும் தமிழர் சுயநிர்ணய உரிமைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனும் கோரிக்கைகளையும் அவர்கள் முன்வைத்துள்ளனர்.

அமெரிக்காவும் உலக சமூகமும் இந்தக் கொடுமையை அங்கீகரிக்க வேண்டும், தமிழர் சுயநிர்ணயத்தை ஆதரிக்க வேண்டும் என பென்சில்வேனியாவின் 12ஆவது காங்கிரஸ் மாவட்ட பிரதிநிதியான சம்மர் லீ வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கரோலினாவின் 2ஆவது காங்கிரஸ் மாவட்டத்திற்கான பிரதிநிதியாகப் பணியாற்றும் காங்கிரஸ் பெண்மணி டெபோரா ரோஸும் தமது பதிவை இடுகை செய்துள்ளார்.

நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் அங்கீகாரம் ஆகியவற்றைத் தொடர்ந்து தேடும் தமிழ் சமூகங்களுடன் தாம் இணைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

நியூ ஜெர்சியின் 3ஆவது காங்கிரஸ் மாவட்டத்திற்கான பிரதிநிதியான காங்கிரஸ் உறுப்பினர் ஹெர்ப் கொனவே, தமிழ் சுயநிர்ணயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நியாயமான மற்றும் நீடித்த அரசியல் தீர்வை வலியுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் உறுப்பினர் டொன் டேவிஸ் காங்கிரஸில் உரையாற்றும்போது, முள்ளிவாய்க்கால் பேரவலத்தை அங்கீகரிப்பதற்காக வாதிடும் அதேவேளையில், ஈழத் தமிழர்களுடன் இணைந்து நிற்குமாறு காங்கிரஸ் உறுப்பினர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *