இலங்கையின் ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் சரித் அசலன்க மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியுள்ளது.
தென்னாபிரிக்க வீரர் கார்பின் போஷ் (Corbin Bosh) அணியை விட்டு வெளியேறியுள்ளதால் அவருக்கு பதிலாக சரித் அசலன்க மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பெற உள்ளார்.
அதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணியில் இணையும் சரித் அசலன்கவுக்கு மும்பை நிர்வாகம் 75 இலட்சம் இந்திய ரூபா வழங்க உள்ளது.
இலங்கை ரூபாவில் அதன் மதிப்பு 26.4 மில்லியன் என்பது குறிப்பிடத்தக்கது
