இலங்கையின் A கிரிக்கெட் அணி அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே ஓருநாள் மற்றும் நான்கு நாட்கள் கொண்ட போட்டித் தொடர்களில் ஆடவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
இலங்கையின் அவுஸ்திரேலிய சுற்றுப்பயணத்தில் மொத்தம் 3 ஒருநாள் போட்டிகளும், 2 நான்கு நாட்கள் கொண்ட போட்டிகளும் ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றன.
எதிர்வரும் ஜூலை மாதம் ஆரம்பமாகும் இந்த தொடரில் முதலாவதாக ஒருநாள் போட்டித் தொடர் நடைபெறுகின்றது.
அதேநேரம் தொடரின் போட்டிகள் அனைத்தும் டார்வின் நகரில் அமைந்திருக்கும் இரண்டு மைதானங்களில் இடம்பெறும் எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.
link: https://namathulk.com/
