இந்த ஆண்டு நிறைவடைவதற்குள் ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பு பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
இதற்கமைய சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் தரம் 1 முதல் 5 வரையிலான வகுப்புகளுக்கும், 6 முதல் 11 வரையிலான வகுப்புகளுக்கும் ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகப் பிரதமர் விளக்கமளித்தார்.
இதற்கமைய தரம் 1 முதல் தரம் 5 வரை சிங்கள மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை 4,240 காணப்படுவதாகவும்,
தமிழ் மொழி மூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 2,827 காணப்படுவதாகவும்,
தரம் 6 முதல் தரம் 11 வரை சிங்கள மொழிமூல ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 11,274 காணப்படுவதாகவும்,
தமிழ் மொழியில் 6 ஆம் வகுப்பு முதல் 11 ஆம் வகுப்புவரை உள்ள ஆசிரியர் வெற்றிடங்களின் எண்ணிக்கை – 6,121 காணப்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் மேல் மாகாணத்தில் சிங்கள மொழி மற்றும் தமிழ் மொழி அரசப் பாடசாலைகளில் தரம் 1 முதல் 5 வரையிலும், தரம் 6 முதல் 11 வரையிலும் பின்வரும் எண்ணிக்கையிலான ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுவதாகவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய இன்றைய பாராளுமன்ற உரையில் தெரிவித்தார்.
link: https://namathulk.com/
