நாமலுக்கு எதிரான மோசடி வழக்கு – நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

Aarani Editor
1 Min Read
Namal Rajapaksa

பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள கிரிஷ் கொடுக்கல் வாங்கல் வழக்கை, ஜூன் மாதம் வரை ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ரக்பி விளையாட்டை ஊக்குவிப்பதாகக் கூறி, இந்தியாவின் கிரிஷ் நிறுவனத்திடமிருந்து 70 மில்லியன் ரூபாயைப் பெற்று நம்பிக்கை மோசடி செய்ததாகக் குற்றம்சாட்டி, சட்டமா அதிபரால் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்றையதினம் (21) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி பிரதீப் அபேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பிரதிவாதி கோரிய சில ஆவணங்கள் இன்று திறந்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரச தரப்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

சில ஆவணங்கள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் ஆய்வு செய்யப்பட்டு வழங்கப்பட வேண்டும் எனவும், பிரதிவாதிகள் கோரும் மற்ற ஆவணங்கள் எதிர்காலத்தில் வழங்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

பிரதிவாதிகள் தரப்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், அனைத்து ஆவணங்களும் வழங்கப்பட்ட பின்னர் பிரதிவாதிகளின் நிலைப்பாடு நீதிமன்றத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அதன்படி, முன்விசாரணை ஆலோசனைக்காக இந்த வழக்கு ஜூன் 27, 2025 அன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *