நியூசிலாந்தின் துணைப் பிரதமரும், வெளிவிவகார அமைச்சருமான வின்ஸ்டன் பீட்டர்ஸ் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.
இதற்கமைய எதிர்வரும் மே 24 ஆம் திகதி அவர் நாட்டுக்கு வருகை தரவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரை அவர் சந்திக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
link: https://namathulk.com/
