வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பஸ் உரிமையாளர்கள்

Aarani Editor
1 Min Read
Bus Owners Protest

யாழ்ப்பாணத்தில் 769 வழித்தட சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் பஸ் உரிமையாளர்கள், சாரதிகள், நடத்துனர்கள் ஆகியோர் இன்று வீதி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்;.

யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து புறப்படும் 764 வழித்தட பஸ்கள் கடந்த காலங்களில்இ வசாவிளான் சந்தியில் இருந்து, பருத்தித்துறை – பொன்னாலை வீதி வரையிலான பலாலி வீதி உயர்பாதுகாப்பு வலயத்தினுள் காணப்பட்டமையால், வசாவிளான் சந்தியுடன் தமது சேவைகளை மட்டுப்படுத்தி இருந்தன.

அதனால் மயிலிட்டி பகுதியில் வசிக்கும் மக்களின் நலன்கருதி, யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்படும் 769 வழித்தட பஸ்கள் மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட்டன.

தற்போது உயர்பாதுகாப்பு வலயத்தின் ஊடாக செல்லும் பலாலி வீதி திறக்கப்பட்டுள்ளமையால், யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்படும் 764 வழித்தட பஸ்கள் யாழ்ப்பாண நகரில் இருந்து புறப்பட்டு பலாலி வீதியூடாக பருத்தித்துறை – பொன்னாலை வீதியை அடைந்து, அதனூடாக காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் உள்ள பஸ் நிலையம் வரையில் சேவையில் ஈடுபடுகிறது.

அதேபோன்று காங்கேசன்துறை ரயில் நிலையத்திற்கு அருகில் இருந்து புறப்பட்டு யாழ்ப்பாணத்தை வந்தடைகிறது.

இந்நிலையில் 769 வழித்தட அனுமதியில் சேவையில் ஈடுபட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் தாம் இதுவரை காலமும் மயிலிட்டியில் இருந்து சேவையை ஆரம்பித்தது போன்று ஆரம்பிக்கவும், யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு, காங்கேசன்துறை வீதி வழியாக மயிலிட்டி வரையில் சேவையில் ஈடுபட அனுமதிக்க வேண்டும் என கோரியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

link: https://namathulk.com/

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *