10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெற்ற போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொண்டது.
இப்போட்டியில் நாணயசூழற்சியில் வென்ற டெல்லி கேபிடல்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.
இதன்படி முதலில் துடுப்பாட்டம் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன்கள் எடுத்தது.
இதனையடுத்து, 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் துடுப்பாட்டம் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி துவக்கமே தடுமாறியது.
18.2 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த டெல்லி அணி 121 ரன்களில் தோல்வியடைந்தது.
இதன் மூலம் மும்பை அணி 59 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் அதிகமுறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் பெங்களூரு அணியை மும்பை முந்தியுள்ளது.
அதிக முறை பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறிய அணிகளின் பட்டியலில் சென்னை அணி முதலிடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Link: https://namathulk.com/
