‘சிலோன் டீ’ என்ற பெயரில் தலைமுறை தலைமுறையாக முன்னெடுத்துச் செல்லப்படும் இலங்கைத் தேயிலையின் பெயர், சுதேச பாரம்பரியத்தை உலகிற்குப் பறைசாற்றுவதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
சர்வதேச தேயிலை தினத்துடன் இணைந்ததாக, தேயிலையினால் கட்டியெழுப்பப்படும் சகவாழ்வு: Yaji 2025 சீன-இலங்கை கலாசார விழாவை முன்னிட்டு கொழும்பில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இதனை கூறினார்.
இந்த நிகழ்வை இலங்கையில் உள்ள சீன கலாசார மையம், இலங்கையில் உள்ள சீன தூதரகம், சீனாவின் ஜிசாங் நிர்வாக பிராந்தியத்தின் கலாசாரம் மற்றும் சுற்றுலாத் திணைக்களம் மற்றும் சீன கலாசாரம் மற்றும் சுற்றுலா அமைச்சு இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இதன்போது, இலங்கை-சீன நட்புறவு பல நூற்றாண்டுகள் பழமையானது மற்றும் சமய ரீதியாகவும் கலாசார ரீதியாகவும் வரலாற்று ரீதியாகவும் வலுவானது என பிரதமர் தெரிவித்தார்
அத்துடன், இலங்கை தேயிலை வர்த்தக சின்னத்தை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கு, தேயிலை உற்பத்தி செயல்பாட்டில் ஈடுபட்டுள்ள அனைவருக்கும், குறிப்பாக தேயிலை பறிப்பவர்களுக்கு, கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை எதிர்கொண்ட சேவை வசதிகள் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை செயற்படுத்துவது முக்கியம் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
இதேவேளை, அரசாங்கமாக அதற்காக உறுதிபூண்டுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
உலகளாவிய தேயிலை ஏற்றுமதியில் சுமார் 15மூ பங்களிப்பைச் செய்து இலங்கை இன்று உலகின் மூன்றாவது பெரிய தேயிலை ஏற்றுமதியாளராக மாறியுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டார்.
Link: https://namathulk.com/
