பிரித்தானியாவின் ஆடை உற்பத்தி நிறுவனமான நெக்ஸ்ட், கட்டுநாயக்கவில் இயங்கி வந்த தமது தொழிற்சாலையை, திடீரென மூடியமையை தொடர்ந்து நெக்ஸ்டின் உற்பத்தித்துறை பணிப்பாளர் டேவிட் ரே அதற்கான காரணத்தை வெளியிட்டுள்ளார்.
அதிகரித்து வரும் உற்பத்தி செலவுகள் காரணமாக, தமது தொழிற்சாலை பல ஆண்டுக்காகவே, இலாபமற்ற நிலையில் இயங்கி வந்ததாக, நெக்ஸ்டின் உற்பத்தித்துறை பணிப்பாளர் டேவிட் ரே தெரிவித்துள்ளார்.
எனவே இந்த தொழிற்சாலையை மூடுவது தவிர்க்க முடியாதது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இலங்கையில் உள்ள தமது மேலும் இரண்டு தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை அடுத்து, தமது தொழில்களை இழந்துள்ள 1,400 தொழிலாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
Link: https://namathulk.com/
